என்னை, நான்...

Wednesday, September 27, 2006

பிறப்பு...

பிறந்ததும் இறந்தேன்
நான் 'அது'வானேன்
என்னில் என்னை உணரவில்லை
என்னுயிர் என்னில் தங்கவில்லை

'அது' சிறப்பந்தஸ்து பெற்றது
யாரும் தீண்டக்கூடாததானது
உயர்குடியிலும் தீண்டாமையா?
உணரத்தான் உயிரில்லையே!

பிள்ளைப் பேறில் குளறுபடி
பிள்ளையாரிடம் பிழைக் கானப்பட்டது
பார்க்கும் திசை மாற்றி
பரிகாரம் செய்யப்பட்டது

நாளொன்று கழிந்தது
என்னை நானே வென்றேன்
தேடி அலைகையில் அகப்பட்டது
எனது உயிர்!!

பெற்றேன் புணர்ஜென்மம்
விழிகள் விழித்தன
கரங்கள் அசைந்தன
அது - அவன் ஆனேன்!!

வாழ்வை வென்றவனென
பெறுமைகள் செய்தனர்
வாழ்வின் முதற்படிக்கே
போராட வேண்டியிருந்தது

பெற்றவர் மகிழ்ந்திருக்க
உறவினம் கூடியிருக்க
இறையின் உருவமாய்
பெயர் சூட்டப்பட்டேன்

வேண்டியவர் மனம்போல
உரைத்தவை ஒன்றுகூட்டி, ஒரு
வாக்கியமே என் பெயரானது!
பெயரிலும் போராட்டமே!!

சிறப்புயிர் பெற்ற
மழலை மனம்
சிறப்புடன் கடந்தது
அகவை ஒன்று!

1 Comments:

Blogger பாலச்சந்திரன் said...

பிறக்கும் போதே இறப்பை வென்றுவிட்டவன் நீ!
பிறகென்ன கல்க்கம்!
(வருங்)காலத்தையும் கலக்க வாழ்த்துக்கள்!!!!!

7:42 AM  

Post a Comment

<< Home